மாணவர் பெறும் மதிப்பெண்; ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வில்மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில்அனைவருக்கும் கல்வி இயக்ககமானஎஸ்.எஸ்.ஏ.திட்டம் மூலம்மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும்ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;இதற்காகமத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்குபயணப்படிசாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாராஅவர் கற்றுக் கொடுத்ததால்,மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா எனஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஜன., 5 முதல் நடக்க உள்ளது. மாவட்டம்வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்துஅவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில்எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோஅந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம்எஸ்.எஸ்.ஏ.விளக்கம் கேட்கும்.