குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனின் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.

காலாண்டுத் தேர்வில் எஸ்எஸ்எல்சி ளஸ் 2 வகுப்புகளில் 60 சதவிகித்த்துக்கும் குறைவாகவும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசியர்கள், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாட ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
அரசுப் பள்ளிகளில் கல்விப் பயிலும் மாணவ, மாணவிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். சில மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டியதிருக்கும்.
அவர்கள் கல்விப் பயிலும் சூழ்நிலையை அறிந்து அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வைப்பது ஆசிரியரின் கடமையாகும். தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளின் மீது தனிகவனம் கொண்டு அவர்களின் நலனின் அக்கறைச் செலுத்தி, பாடங்களை நடத்திட வேண்டும்.
அப்படி செய்யும்போதுதான் அரையாண்டுத் தேர்வில் அதன்பலன்களை பெற முடியும். ஆண்டு இறுதித்தேர்வில் சாதனை படைக்க முடியும். எனவே இதனை கவனத்தில் கொண்டு பாடங்களை நடத்த வேண்டும்.
இதுவரை 5 மாவட்டங்களில் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது என்றார் கண்ணப்பன்.
கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி ஆகியோர் பேசினர்.
காலையில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி வகுப்புக்கான கூட்டத்தில் 56 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 152 ஆசிரியர்களும், பிற்பகலில் பிளஸ் 2வகுப்புக்கான கூட்டத்தில் 40 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 100 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, முடிவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க 
உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கு நுாறு, 'சென்டம்' எடுக்கும் மாணவர்; மாநில, 'ரேங்க்' பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு எளிமையான கேள்விகளும், மதிப்பெண்ணில் காட்டப்படும் தாராளமும் காரணம். எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்துள்ளனரா அல்லது மனப்பாடம் செய்துள்ளனரா என, அறிய முடிவதில்லை. இதை, சோதனை செய்யும் விதமாக, இந்த ஆண்டு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து, புதிய கேள்விகள் கேட்குமாறு, உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், கடினமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. எனவே, முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள், கெய்டுகள், புத்தகத்தில் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வினாக்களை படித்தால் மட்டும் போதாது. பாடப்புத்தகத்தில் உள்ள வழக்கமான கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் முழு சாராம்சத்தையும் புரிந்து படித்தால்தான், அதிக மதிப்பெண் பெற முடியும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், பாடப்புத்தகம் முழுவதையும், மாணவர்களை படிக்க வைக்குமாறு, அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவுறுத்தி உள்ளார்.

விடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 2014 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர்அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 14ல், 69 ஆயிரம் பேர்; 2012  13ல், 38 ஆயிரம் பேரும்சென்டம் எடுத்தனர்.
இதன்படிமூன்று கல்வி ஆண்டுகளில், 10ம் வகுப்பு அறிவியலில், 100க்கு, 100 எடுப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும்கல்வித்தரம் உயரவில்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே தேர்வு முறைபாடத்திட்டம்விடைத்தாள் திருத்த முறையை மாற்றகல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதனால்இந்த ஆண்டுஅறிவியலில் சென்டம் எண்ணிக்கையை குறைக் கும் வகையில்கடினமான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கஅரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்பபள்ளி கல்வித்துறையும்அறிவியல் புத்தகத்தில் கூடுதல் கேள்விகளை இணைத்து உள்ளது. ஆனால்இந்தக் கேள்விகளுக்குபாடங்களில் விடைகள் இல்லாததால்மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு சிக்கலான கேள்விகளை கொடுக்கபள்ளி கல்வித்துறையுடன் இணைந்துவினாத்தாள் தயாரிப்பை மாற்ற வேண்டும். அதை விடுத்துபாடங்களில் இல்லாத வினாக்களை மட்டும் கொடுத்துள்ளதால்மாணவர்களும்ஆசிரியர்களும் குழப்பத்துக்கு ஆளாகிஉள்ளனர். இந்த வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளமாணவர்கள்கெய்டு வாங்கினால்அதிலும் சரியான விடை இல்லை. ஒவ்வொரு கெய்டிலும் ஒரு விடை கூறப்பட்டு உள்ளது. இதனால்புத்தகத்துக்கும்,வினாக்களும் சம்பந்தமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவேபள்ளி கல்வித்துறைபுத்தகங்களில் இல்லாத வினாக்களுக்குதனியாககீ ஆன்சர் வெளியிட வேண்டும். இல்லையென்றால்அத்தகைய வினாக்களை நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம்-மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு

 பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கழகத்தின் மாநில பொதுக்குழுகாஞ்சிபுரம் மாவட்டம்,தாம்பரத்தில் கூடியது. அதில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில்பல முரண்பாடுகள் உள்ளன. இவற்றை நீக்க அமைக்கப்பட்டசீராய்வுக்குழு அறிக்கையை அமல்படுத்தவில்லை. எனவேஅறிக்கையை அமல்படுத்த வலியுறுத்திமுதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,நவ., 28ம் தேதிசென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை, 10 மடங்கு அதிகரித்துள்ளது. அரசின், 14 வகை இலவச திட்டங்கள்வருவாய் துறை பணிகளாலும்ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கதனி அலுவலரை நியமிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

2014–15ம் ஆண்டுக்கான CPS கணக்குத் தாள்களை, URLhttp://218.248.44.123/auto_cps/public என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

சென்னை,
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
4.20 லட்சம் பேர்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் 2003–ம் ஆண்டு ஏப்ரல் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படிக்கு பிரதி மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவுத் தொகையை அரசும் தன் பங்காக செலுத்தும். அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்குத் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிட்டு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
விடுபட்ட கணக்குகள்
விடுபட்ட 21 லட்சத்து 70 ஆயிரத்து 464 வரவு நேர்வுகள், கருவூலக் கணக்குத் துறையால் சரிபார்க்கப்பட்டு உரிய அரசுப் பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு 2014–15ம் ஆண்டிற்கான கணக்குத் தாள்கள் (அக்கவுன்ட் சிலிப்ஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் யாரும் விடுவிக்கப்பட்டு இருந்தாலோ, குறைகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அரசு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வலைதள முகவரி
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014–15ம் ஆண்டுக்கான கணக்குத் தாள்களை, URLhttp://218.248.44.123/auto_cps/public என்ற வலைதள முகவரியில் அவரவர் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-இல் மாவட்டத்துக்குள்ளும், 27-இல் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

 
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக, 927 காலிப் பணியிடங்கள் உள்ளன.
 கலந்தாய்வுக்குப் பிறகு காலிப் பணியிட விவரங்கள் பெறப்படும். இதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்வதற்கான இணைய வழியில் கலந்தாய்வு அக்டோபர் 30-இல் நடைபெறுகிறது.
 இந்த நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்காக 927 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிக அளவில் உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி

கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அதிக மதிப்பெண் பெற்ற, 100 மாணவர்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட மையத்தில் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வு வரை, 50 நாட்களுக்கு, இப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட அளவில், ஒரே மையம் என்பதால், மாணவர்களுக்கு, போக்குவரத்து படியும், மாலை வரை வகுப்பு நடத்த வேண்டும் என்பதால், சிற்றுண்டி செலவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை பார்த்த, ஆசிரியர்களுக்கு மயக்கம் வராத குறையாக புலம்புகின்றனர். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND) விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு செயலர்களுக்கும் கடிதம்.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம்

மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.அதன்படி, மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

வட்டார வளமையங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்ற கல்வித்துறை ஏற்பாடு-ஆசிரியர் பயிற்று னர்கள் எதிர்ப்பு

 

அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்க புதிய அமைப்பு முயற்சி


விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல புதிய வழிமுறைகளை கையாள வேண்டும் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு பாது காப்பாக எடுத்துச்செல்ல புதிய முறையை கையாள வேண்டும் என கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத் தலைவர் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 8.3.2010-ல் பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 262 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக கோவைக்கு தபாலில் அனுப்பியபோது அவை மாயமாயின. இதனால் அந்த 262 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. பொதுத் தேர்வு விடைத்தாள் களை திருத்தும் மையங்களுக்கு அனுப்பும்போது அதிகாரிகள் கவனக்குறைவுடன் உள்ளனர். தபால்களுடன் சேர்த்தும், தனியார் பஸ்களிலும் பிற தபால்களுடன் சேர்த்து அனுப்புகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிர்மலாராணி வாதிட்டார். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆனந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை விளக்கியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: தேர்வுத்தாள் மாய மானது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். தேர்வுத் தாள் மாயமாகும்போது தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிப் புக்கு ஆளாகின்றனர். எனவே, பொதுத் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை திருத்தும் மையங் களுக்கு மிகுந்த பாதுகாப் புடன் எடுத்துச் செல்ல வேண்டும். இதற் காக புதிய வழிமுறைகளை உரு வாக்கி அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் மறுதேர்வு எழு திய மாணவர்களுக்கு இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவை சம்பந்தப்பட்ட மாண வர்கள் தாக்கல் செய்யவில்லை. இழப்பீட்டுக்காக சம்பந்தப்பட்ட மாணவர்கள் உரிமையியல் நீதிமன் றத்தை நாடலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ம் தேதியை இளைஞர் எழுச்சி தினமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை தமிழக அரசு இளைஞர் எழுச்சி தினமாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதியை (வியாழக்கிழமை) இளைஞர் எழுச்சி தினமாக பள்ளி, கல்லூரிகளில் கோலாகல மாக கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக் கும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, 15-ம் தேதி அன்று விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி, கலாம் தொடர்பான எழுச்சியூட்டும் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்து மாறு கல்வி நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 14, 15-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு விண்வெளி கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத் துப் பள்ளிகளிலும் இளைஞர் எழுச்சி தினத்தை கோலாகல மாக கொண்டாடுமாறு பள்ளிக் கல்வித்துறையும் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல், அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுமாறு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.