பல்வேறு பணியிடங்களுக்கான நவம்பர் 2015 மாதத்திற்கு சம்பளம் வழங்கும் அதிகார ஆணைகள்

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வரும் நிலையில் ஆசிரியர்களை, பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.
தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.- நமது நிருபர் -

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்

நேற்று(30.11.2015 கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்: புதிய கல்விக் கொள்கை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி: அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்துறை சார்ந்த ஆலோசனைகளுக்குப் பின் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய பாடத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் பாடத்திட்டத்திட்டுக்கும் சிறந்த ஒத்துழைப்பை அடுத்த ஆண்டு முதல் காண முடியும். மத்திய பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திட்டங்களிலும் வெவ்வேறு பாடத்திட்ட முறைகள் பின்பற்றப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் ஜனவரி 26-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.
 இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 4 (வெள்ளிக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.
 இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது. அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....: இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.
 சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.
 இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 அரையாண்டு தேர்வு மாற்றம்? அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

திறனாய்வு தேர்வுக்கு 30-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியுடைய மாணவர்களை தேர்வுசெய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி தேர்வு வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) 30-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து டிச. 15-ம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரை ஆண்டு தேர்வு அட்டவணையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை; பள்ளி கல்வித்துறை இயக்குனர் தகவல்

அரை ஆண்டு தேர்வு அட்டவணையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வி இயக்குனரகம் கடந்த நவம்பர் மாதம் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரை ஆண்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 7-ந் தேதி தொடங்கி டிசம்பர் 22-ந் தேதி முடிவடையும் என்றும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு டிசம்பர் 9-ந் தேதி தொடங்கி டிசம்பர் 21-ந் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 கற்றல் கட்டகம் (MINIMUM MATERIAL) 2015-2016(தமிழ் மற்றும் ஆங்கில வழி )

ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

சென்னை:மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
இதுபோன்ற பேரிடர் காலங்களில், மாணவர்களையும், தங்களையும் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, சென்னையில், லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், இன்று பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி துவங்குகிறது;28 வரை நடக்கிறது.

திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை

 ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது.

ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயலாற்றல், வகுக்கப்பட்ட வரையறைக்கு உட்படவில்லை எனில், வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது. சிறந்த செயலாற்றலுக்கான அளவீட்டை, 'நன்று' என்பதில் இருந்து, 'மிக நன்று' என உயர்த்த வேண்டும். பணியில் சேர்ந்த, 20 ஆண்டுக்குள், நிர்ணயிக்கப்பட்ட திறன் அளவீட்டை எட்ட முடியாத அரசு ஊழியர்களுக்கு, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். திறன் மேம்படாத ஊழியர்கள், தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

7வது ஊதியக்குழு அறிக்கை அமலானால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி

ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு, ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதற்காக ஊதியக்குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும்.

மத்திய அரசின் புதிய பாடத்திட்டம்; ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

திண்டுக்கல்: மத்திய அரசின் ஒரே கல்வித்திட்டம் குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்தில் ஒரே கல்விஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான திட்டம் வகுத்துமாநிலங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் 21 லட்சம் இடங்களில் சிறப்பு கருத்துக்கேட்பு முகாம்கள் நடந்து வருகின்றன.
மதுரைகோவைசென்னையில் மட்டுமே கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடந்தன. கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாநில அரசு அதிகாரிகளை வைத்தே மத்திய அரசு நடத்தி விட்டது. தமிழககேரள மாநிலங்களில் இக்கூட்டங்களில் கல்வியாளர்கள்,சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க புதிய திட்டத்தில்குற்றம் புரியும் ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களேதண்டிக்கலாமாஅல்லதுடிஸ்மிஸ் பண்ணலாமாஎன்பதை மக்களே தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் உள்ளது.
ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் சொந்த மாவட்டம் சார்ந்த வரலாறு இடம் பெறாமல் போவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. இதுமாதிரியான 13 அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளதுஎனக்கூறி,தமிழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மோசஸ் கூறியதாவது: தவறுகள் இழைக்கும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் தண்டிக்கும் அதிகாரத்தை கிராம நிர்வாகத்தின் கைகளில் திணிப்பது ஏற்புடையது அல்ல.
ஆரம்பக் கல்வியில் மாவட்டத்தின் வரலாறே இல்லாத வகையில் பாடத்திட்டம் அமைய இருப்பது,அடிப்படை கல்வியே ஆட்டம் காண வைப்பதாகும். இதற்கு எதிராக டிச., 8ல் இந்திய பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில்தமிழக கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திகலெக்டர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம் என்றார்.

மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சீருடை, புத்தகம், நோட்டு பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக ஒரு சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அவரது அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் அவர்கள் தொடர்ந்து படிக்க ஏதுவாக விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், ஒரு சீருடை ஆகியவற்றை உடனடியாக வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பாடப்புத்தங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், சமூகநலத் துறை ஆகியவற்றிடமிருந்து பெற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சிறுபான்மை மாணவர்கள் மொழிப்பாடத்தை விருப்ப தேர்வாக எழுத அரசு அனுமதி

சென்னை எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறுபான்மை மாணவர்கள் தங்கள் மொழிப்பாடத்தை விருப்ப தேர்வாக எழுத தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு தமிழ் கட்டாய பாட சட்டம் -2006-இன் படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பகுதி-1-ல் தமிழ்மொழி கட்டாய பாடம் ஆகும். அதேபோல், பகுதி-2-ல் ஆங்கிலமும், பகுதி-3-ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவையும் கட்டாய பாடங்கள். இந்த நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறுபான்மை மொழிப்பாடங்கள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதா வது: 2016-ல் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத சிறுபான்மை மொழிகளை (அதாவது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, சமஸ்கிருதம், அரபிக், பிரெஞ்சு, குஜராத்தி) தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் பகுதி-4-ல் சிறுபான்மை மொழிப்பாடத்தை ஒரு தேர்வாக எழுதிக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு ஒரே தாள் கொண்ட தேர்வு மட்டும் நடத்தப்படும். சிறுபான்மை மொழிப்பாடங்களில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண், தேர்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதேநேரத்தில் அந்த மதிப்பெண் விவரம், எஸ்எஸ்எல்சி சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று கூறியிருக்கிறார். எனவே, பகுதி-4-ல் தேர்வெழுத உள்ள மாணவர்களின் பாட விவரங்களை தயாராக வைத்திருக்குமாறு அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் பல சலுகைகள் ரத்து

வீட்டு உபயோக பொருட் கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இனி அது வழங்கப்படாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பாண்டிகை காலங்களில் சம்பள முன் தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் இனி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் வாடகை கணக்கீடு உயர்த்தப்படாமல் 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரகசிய அறிக்கை மூலம் ‘நன்று’ கிடைத்தால் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ‘மிக நன்று’ கிடைத்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியிருப்பது, ஒரு சிலருக்கு மட்டுமே பதவி உயர்வு வாய்ப்பு அமையும். இதுபோன்று பல சலுகைகளை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் பறிக்கப்பட்டுள்ளது

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை,

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

7-வது சம்பள கமிஷன்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். 

7-வது சம்பள கமிஷன் பரிந்துரை மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை பறிப்பதாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம்(தமிழ் பிரிவு) அறிவித்துள்ளது. 

செப்டம்பரில் தேர்வு எழுதியவர்கள் பிளஸ்–2 விடைத்தாள் நகல் இன்று பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, 

செப்டம்பர் மாதம் பிளஸ்–2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling /Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 23–ந் தேதி காலை 10 மணி முதல் 25–ந் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பணியில் உள்ள பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின் சம்பளப்பணத்தில் வருமான வரித்துறையினர் வரி வசூலிக்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
சுற்றறிக்கை

சென்னை ஐகோர்ட்டில், கோவை நிர்மலா கல்விச் சங்கம், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி (ரோமன் கத்தோலிக்க நிறுவனங்கள்) சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கோவை நிர்மலா கல்விச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் சங்கம் சார்பில் மகளிர் கல்லூரி நடத்தப்படுகிறது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யத் தேவையில்லை. இதுதொடர்பாக வருமான வரித்துறை கடந்த 1944-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.

பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க 27 வரை அவகாசம்

சென்னை பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 27-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட் டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித் தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, தனித் தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சேவை மையங்களுக்குச் சென்று விண் ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

7th cpc- Proposed Rationalaised Entry pay for each pay band


Highlights of 7th Pay Commission report


Highlights of Recommendations of Seventh Central Pay Commission
Recommended Date of implementation: 01.01.2016
Minimum Pay: Based on the Aykroyd formula, the minimum pay in government is recommended to be set at ₹18,000 per month.
Maximum Pay: ₹2,25,000 per month for Apex Scale and ₹2,50,000 per month for Cabinet Secretary and others presently at the same pay level.
* 23.55 per cent increase in pay and allowances recommended
* Recommendations to be implemented from January 1, 2016
* Minimum pay fixed at Rs 18,000 per month; maximum pay at Rs
2.25 lakh
* The rate of annual increment retained at 3per cent
* 24 per cent hike in pensions
* One Rank One Pension proposed for civilian government employees on line of OROP for armed forces
* Ceiling of gratuity enhanced from Rs 10 lakh to Rs 20 lakh; ceiling on gratuity to be raised by 25 per cent whenever DA
rises by 50 per cent

-DOWNLOAD-மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதிய குழு அறிக்கை

கட்டாய தமிழ் பாட பிரச்னைக்கு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

 கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அமைப்பின் பொதுச் செயலர்டாக்டர் சாதிக்தாக்கல் செய்த மனு:தெளிவான வழிமுறைகள்தமிழ்மொழி கற்றல் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. &'1 முதல், 10ம் வகுப்பு வரைகண்டிப்பாக தமிழ் மொழியைஒரு பாடமாகக் கற்க வேண்டும்&'எனஅந்த சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த,தெளிவான வழிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும்படிதமிழக அரசுக்கு, 2014 மே மாதம்மனு அனுப்பினோம்எந்த நடவடிக்கையும் இல்லை.

தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுதீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால்கனமழை காரணமாக கடலுார்விழுப்புரம்நாகை,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 11ம் தேதி பள்ளிகளை திறக்க முடியவில்லைதிறந்திருந்த பள்ளிகளும்பாதியில் மூடப்பட்டன. இதையடுத்துதொடர் மழை பெய்ததால், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்பள்ளிகல்லுாரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்பள்ளிகல்லுாரிகள் மூடப்பட்டன. இன்றும் சென்னைதிருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு டிசம்பர் முதல் வாரத்தில்அரையாண்டுத் தேர்வுமற்ற வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தேர்வு நடக்கவுள்ள நிலையில்தொடர்ந்து, 10வது நாளாகபள்ளிகள் இயங்கவில்லை.

மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்


பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. '
இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன. அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில் தத்தளிக்கின்றனர்.இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன், தலைவர் தனபால் கூறியதாவது:
இது முற்றிலும் வருவாய்த்துறைக்கு உட்பட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் விவரப் பட்டியல், கல்வி உதவி தொகைக்கான வங்கி கணக்கு எண்கள், நலத்திட்ட விவரம் என பல்வேறு
பதிவேற்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மூவகைச் சான்றிதழ் பணிகளை தாலுகா அலுவலகங்களில் செயல்படும் 'இ சேவை' மையங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், என்றனர்.

CPS,GPF மற்றும் ECS தகவல்களை பெற ஆண்ட்ராய்டு செயலி

CPS,GPF மற்றும் ECS தகவல்களை பெற ஆண்ட்ராய்டு  செயலியை .இந்த APP பெற உங்கள்  ஆண்ட்ராய்டு மொபைலில் PALY STORE ல் CPS AND GPF என்று SEARCH செய்து INSTALL செய்து கொள்ளலாம் .
This is a new android app for tetting the CPS, GPF particulars through online. There are lakhs of Govt Employees through out Tamilnadu which includes teachers and govt staff. Now-a-days the CPS ( Contributory Pension Scheme ) is followed. The details about CPS and GPF are comuterised by the Government. So this app is very useful to get the Account Slip, CPS missing credit details, and to know the missing credit details by simply entering our number and particulars.
There is also a tap button for enter the ECS Token number only you enter the exact CPS (or) GPF, you can get the correct details of your ECS Token number.

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்

அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக, 900 பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 2011 முதல், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

புதிய கல்லுாரிகளில், தலா, ஐந்து உதவி பேராசிரியர்கள் வீதம், 60 பேரும்; புதிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம், 3,165 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் முதற்கட்டமாக, காலை நேர வகுப்பு களில் தற்காலிகமாக, 2,072 கவுரவ பேராசிரியர்களை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கவும், மீதமுள்ள, 1,093 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, டி.ஆர்.பி., மூலம் ஆட்களை தேர்வு செய்யவும், தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விதிகளின் கீழ், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

7th CPC Minimum Pay 21000 and Fitment Formula from 2.86 to 3.15

“There is a possibility of 7th CPC to submit its report on 20th November 2015 or 23rd November 2015 , but the report will not be to your expectations, The minimum wage taking into prices published by the Government of India shall come to Rs 26,000/-, considering the existing retail prices the minimum wages works out to Rs 28,000/- and fitment formula shall works out to 4.00 , but the minimum wage may be around Rs 21,000/ against the justified demand of Rs 28,000/- the fitment formula may be from 2.86 to 3.15 , also many other important demands of five promotion policy, Increment rate increase, retirement issues, pension issues etc.We have to wait and watch the 7th CPC report will the 7th CPC accept the staff side demands or not.”

மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை
:* தொடர் மழையால், பள்ளிகளின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படும். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து குறைந்தது, 20 அடி துாரம் வரை, மாணவர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை திறக்க வேண்டாம். அவற்றை பூட்டி, மாணவர்கள் அருகே செல்லாமல் பாதுகாக்க வேண்டும்
* மின் கசிவை கண்டறிந்து, மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும்
*பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவதுடன், திறந்த நிலையில் தொட்டிகள், பள்ளங்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
* வெள்ளம் வரும் இடங்கள், நீர் நிலைப்பகுதிகளை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், 'வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது' என, எச்சரிக்க வேண்டும்
* பருவ மழையால், 'சிக்-குன் குனியா, டெங்கு' போன்ற காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?

மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

இளமை காலத்தில் மாணவர்கள் அதிகப்படியான நேரத்தை பள்ளியில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்று விடுவதாலும், தனிக்குடும்பங்களாக வாழ்வதாலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கே அதிகம் உள்ளது.ஆனால், இன்றைய மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்; யாரும் தங்களை உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என, நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள், 'தற்கொலை' என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆசிரியர்கள் தான். இன்றைக்கு ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், அதே நேரத்தில் கல்வி அதிகாரிகளின், 100 சதவீத தேர்ச்சி என்ற நிலையை எட்டியாக வேண்டிய கட்டாயம் என, இருதலைக் கொள்ளி எறும்புகளாக ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் விரைவில் ரத்து: வெங்கய்ய நாயுடு

ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய நகர்ப்புற, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாதில் சனிக்கிழமை ஆந்திர-தெலங்கானா வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமைச்சர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏன் மானியம் வழங்க வேண்டும்? பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக என்னிடம் பேசினார். அப்போது, "எரிவாயு மானியத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு 3 கோடி போலி இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகியுள்ளது' என்று அவர் என்னிடம் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா பெருமளவில் ஈர்த்து வருகிறது.
நாட்டின் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சில விரும்பத்தகாத சம்பவங்களை வேண்டுமென்றே பெரிதுபடுத்தி சர்வதேச அளவில் நாட்டின் புகழை சிலர் கெடுக்கின்றனர் என்றார் வெங்கய்ய நாயுடு.
பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்கள் வாக்களித்து மோடியைப் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இதனை எதிர்ப்பாளர்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார்.

பத்தாம் வகுப்புத் அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை



தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

பிளஸ் 2 வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை


பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:


*.தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள்வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.


பள்ளி மாணவர்களுக்கு புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

புதுடெல்லி 
பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது. 
டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார். 
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 
-பிடிஐ 
மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் டெல்லியில் நேற்று ‘இ-பாடசாலா’ என்ற மொபைல் அப்ளிகேஷனை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.