ஆசிரியர்களின் போராட்டம் 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு ஜாக்டோ உயர்மட்ட குழுவில் அறிவிப்பு

ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழுவின் கூட்டம் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமைண்ட், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஜாக்டோ சார்பாக மத்திய அரசின்  6 வது  ஊதியக்குழு அறிவித்த ஊதியம் மற்றும் பிறப்படிகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசால் வழங்கப்படாததை வழங்க வேண்டியும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்ய வேண்டியும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் 5 கட்டங்களாக போராட்டங்களை நடத்தினோம்.அதனைத் தொடர்ந்து கடந்த 20 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினோம்.
ஆனால் ஜாக்டோவின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தற்பொழுது செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ அமைப்பின் சார்பில் நடைபெற இருந்து அனைத்துப் போராட்டங்களும் 3 மாதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
மீண்டும் புதிய அரசு அமைந்த பின்னர் தங்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என இளங்கோவன் கூறினார்.