பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்-பள்ளிக் கல்வி இயக்குனரகம்

பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் 
உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:
பிளஸ் 1 வகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; எஸ்.சி., பிரிவினருக்கு, 18; எஸ்.டி., பிரிவினருக்கு, 1; இதர பிரிவினருக்கு, 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த விதிகளை மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும்போதே, தனியாக பதிவேடு வைத்து, இன வாரியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன், தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆக., 31க்குள் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை குறித்த விவரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது