+2 சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 24 முதல் மே 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிகலாம்.

சென்னை: மேல்நிலைப் பொது தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 24 முதல் மே 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிகலாம்.
அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

ஜூன் 22 முதல் ஜூலை 04ம் தேதி வரை நடைபெறவிருக்கும், மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் மே 24  முதல் மே 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

 ‘எச்’ வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் 

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். 

தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும்.

தேர்வு அட்டவணை: 

தேர்வு தேதி    பாடம்

22.06.2016  மொழி தாள் I

23.06.2016    மொழி தாள் II

24.06.2016 ஆங்கிலம் I

25.06.2016 ஆங்கிலம் II

27.06.2016 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல்

28.06.2016 வணிகம், புவியியல் மற்றும் ஹோம் சயின்ஸ்

29.06.2016 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி மற்றும்  ஊட்டச்சத்து மற்றும் உணர்வுவிதி

30.06.2016 இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர்  வேதியியல், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ், மற்றும்  அட்வான்ஸ் தமிழ்

01.07.2016 தொழிற் கல்வி,  அரசியல் அறிவியல், நர்சிங்  (ஜெனரல்) மற்றும் புள்ளியியல்

02.07.2016 உயிரியல்,  வரலாறு, தாவரவியல் மற்றும் பிசினஸ்  மேக்ஸ்

04.07.2016 இயற்பியல் மற்றும் பொருளாதாரம்