பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதிச் சீட்டு: தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை தேர்வறை அனுமதிச் சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
சிறப்பு அனுமதி (தட்கல்): மேலும், அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தின் கீழ் பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தாலும் தமிழ கத்தில் அது தொடர்பான அர சாணை 15.11.2011 அன்றுதான் வெளியிடப்பட்டது.

CPS-பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.


புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு பராமரிக்கப்பட்டது. அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது.

8-ம் வகுப்பு திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு

சென்னை அரசு தேர்வுகள் இயக்கு நர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட உள்ளது. இந்த உதவித் தொகை வழங்குவதற்கு தகுதியான மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு என்எம்எம்எஸ் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 23-ம் தேதி நடை பெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. சில மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு வெகுநாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெற வுள்ளதாலும், மாணவர் களின் நலன் கருதி என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் கூறியுள்ளார்.

7-வது ஊதியக்குழு பரிந்துரை ஆராய உயர்நிலைக் குழு

புதுடெல்லி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக முடிவெடுப் பதற்காக அமைச்சரவை செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத் துள்ளது. 7-வது ஊதியக்குழு தன் பரிந்து ரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்து ரைகளை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, “7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை பரிசீலனை செய்ய, செயலாளர்கள் அளவிலான குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால், 2016-17ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும்’’ என்றார்.

அரையாண்டு தேர்வில் புதிய வினாத்தாள் அறிமுகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது.
பொதுத் தேர்வுக்கு முன்னோட்டமாகதேர்வு துறையின் புதிய வினாத்தாள் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில்நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படும்&' எனஅரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதனால்,அனைத்து மாணவர்களும் புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே,சென்டம் பெறலாம் என்ற நிலை உள்ளது.
அதற்கு முன்னோட்டமாகஅரையாண்டு தேர்விற்கு தேர்வுத்துறை உருவாக்கியுள்ள வினாத்தாளை பார்த்துக் கொள்ளலாம் என,தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்குநேற்று துவங்கிய அரையாண்டு தேர்வில்புதிய முறை வினாத்தாள் அறிமுகமானது. பாடங்களின் பின்பக்க கேள்விகள்முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு கேள்விகள் தவிரபாட அம்சங்களில் இருந்தும் புதிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இந்த கேள்விகளுக்குவகுப்பில் முதல் தர மாணவர்கள் மட்டுமே பதில் எழுத முடிந்ததுபிற மாணவர்கள் திணறினர். இனி வரும் பொதுத்தேர்வில்இதுபோன்ற வினாத்தாள் முறையே அறிமுகமாக உள்ளது. எத்தனை கேள்விகள்பிளஸ் 2 தமிழ் முதல் தாள் வினாத்தாளில்நான்கு மதிப்பெண்ணில்ஒரு கேள்விஒரு மதிப்பெண்ணில்ஒன்பது கேள்விகள் என, 13 மதிப்பெண்களுக்குமொத்தம், 10 கேள்விகள்,புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தன.
இதேபோல், 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில்நான்கு மதிப்பெண்ணில்இரண்டு கேள்விகள்இரண்டு மதிப்பெண்ணில் ஆறுஒரு மதிப்பெண்ணில் நான்குஎட்டு மதிப்பெண்ணில் ஒன்று எனமொத்தம், 32மதிப்பெண்களுக்கு, 13 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தகுதியான மாணவர்கள் மட்டுமே சென்டம் பெற வேண்டும் என கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தை வரவேற்கிறோம். புத்தகம் முழுவதையும் ஆசிரியர்களால் பாடம் நடத்த முடிவதில்லை. அதனால்பயிற்சி நாட்களை காலாண்டுக்கு முன்பே வைத்து கொண்டுவகுப்பு நாட்களை அதிகப்படுத்தினால் தான் மாணவர்களை புதிய முறைக்கு தயார்படுத்த முடியும். இளங்கோதமிழக உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்ட நிர்வாகி.

பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம்: 3 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
1.1.2016ன் அடிப்படையில் தலைமையாசிரியர் பதவிக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். இதன்படி 2001- 2002 கல்வியாண்டில் நேரடியாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலையில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறைகளில் இருந்து கல்வித்துறைக்கு மாற்றலானவர், தொடக்க கல்வியில் இருந்து பள்ளி கல்விக்கு மாற்றமானவர் என்ற பிரிவில் உள்ள ஆசிரியர்களை பணி மூப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.]
ஆனால் 2002-2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேரை இப்பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை. 2002 டிசம்பரில் பணி நியமனம் பெற்றவர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன் கூறியதாவது:
தலைமையாசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலில் 2002 ஜூலையில் நியமனம் பெற்றவர்களை விடுவித்து, அதன் பின் டிசம்பரில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பட்டியலில் எவ்வாறு சேர்க்கலாம். காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்களையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கையாக மீண்டும் அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள கற்றல் கையேடுகள் 2015-2016

10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளி
யிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே, மழை, வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு, ஜன., 11ல் துவங்கும் நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு  வராமல் மாணவர்கள் தவித்தனர்.செய்முறை தேர்வு தேதி தெரிந்தால் தான், 'ரிவிஷன்' தேர்வுகளை திட்டமிட முடியும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பை, அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல் பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம் கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை

ஹைதராபாத் ஆந்திர மாநில கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா நேற்று அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தாடிமர்ரி மண்டலம், ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு வகுப்பில் ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் சர்தார் பாபு வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அங்கு முதன்மை செயலாளர் சிசோடியா, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்ததை கண்டதும், வகுப்பில் இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பின்னர் வகுப்புக்குள் சென்ற முதன்மை செயலாளர், பாடத்தை நிறுத்த வேண்டாம் என கூறி தொடர்ந்து பாடம் நடத்தும்படி ஆசிரியர் சர்தார் பாபுவை கேட்டுக்கொண்டார். ஆனால் சர்தார் பாபு ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் பாடம் நடத் தினார். இதைக் கண்டு முதன்மை செயலாளர் சிசோடியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆசிரியர் சர்தார் பாபுவை சோதிப்பதற்காக அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடி னார். ஆனால் பதில் அளிக்க முடியாமல் ஆசிரியர் திணறினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிசோடியா, ஆசிரியர் சர்தார்பாபுவை உடனடியாக பணிநீக்கம் செய்து, அதற்கான உத்தரவையும் வகுப்பிலேயே வழங்கினார்.

ஆசிரியர்கள் அடிக்கடி பயிற்சிக்கு செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு ஜாக்டா ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சென்னை தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இள மாறன், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, இந்த மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கியது வரவேற்கத்தக்கது. ஆர்எம்எஸ்ஏ எனப்படும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ், 9, 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு துறை வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வரவேற்கக்கூடியதுதான் என்றாலும், மழை வெள்ளப் பாதிப்பு காரணமாக கடந்த 33 நாட்களாக பள்ளிகள் இயங்காததால் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆர்எம்எஸ்ஏ பயிற்சிக்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 முதல் 5 ஆசிரியர்கள் சென்றுவிட்டால் அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவர். ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என்பதால் இத்தகைய பயிற்சிகளை ரத்து செய்துவிட்டு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாக்டா சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2016 நிலவரப்படி முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் -விவரங்கள் கோருதல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 04ம் தேதியில் துவங்கி ஏப்ரல் 1ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரையும் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை தேர்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காலை 10 மணி முதல் மதியம் 1. 15 வரை நடக்கும் .

12 ம் வகுப்பு தேர்வுகள் தேதி விவரம் வருமாறு :

மார்ச் -4 ; தமிழ் மொழி முதல்தாள்

மார்ச்- 7 தமிழ் மொழித்தாள் -2

மார்ச்- 9 ; ஆங்கிலம் முதல்தாள்