கல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது.

இதன்படி 2012, 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையிலான தேர்ச்சியால் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதேபோல், '90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதில் இருந்து, அரசு சார்பில் 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு 85 சதவீதம் அதாவது, 90 மதிப்பெண்ணில் இருந்து 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி,' என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர்.
ஆனால், இதுதொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டதால் அந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்குகளை முடித்து, தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.மேலும், 23.8.2010க்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நவ.,க்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்படாதபட்சத்தில் இவர்களின் பணி நியமனத்திலும் புதிய குளறுபடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:டி.இ.டி., தேர்வில் அரசு அறிவித்த சலுகை என்பது கொள்கை முடிவு. குறிப்பாக, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் விஷயத்தில் அரசு ஆர்வம் காட்டாததால் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

என்.சி.டி.இ.,யின் முரண்பாடான பாடத் திட்டம், தமிழக அரசின் 'வெயிட்டேஜ்' முறையும் குழப்பத்திற்கு முக்கிய காரணம். இதை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும்.

சிக்கலில் பள்ளிகள்: அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் டி.இ.டி., தேர்வு கட்டாயமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித அரசாணையும் பிறப்பிக்காததால் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனங்களும் குழப்பத்தில் உள்ளன, என்றார்.கல்வித் துறையில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு



6 மற்றும் 8 முதல் 12ம் வகுப்பு வரை திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.11 மற்றும் 12 ம் வகுப்பு  புத்தகங்களில் சில பக்கங்களில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு புத்தகத்தின் இறுதியில் வழங்கபட்டுள்ளது.

http://www.textbooksonline.tn.nic.in/




தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

 தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 1ம் தேதி, மாணவ, மாணவிகளுக்கான இலவசப் பொருட்கள் மற்றும் பேருந்து பயணச் சீட்டு ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுரைகள் (2016-2017ம் கல்வியாண்டு)

பிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், இந்த ஆண்டு கணிதம், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றில், 100க்கு, 100 எடுத்தவர்களின் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் மாணவர் பலர், மாநில, 'ரேங்க்' எட்டியதால், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேர்ந்த மாணவர்களிடையே வணிகவியல் படிப்புக்கு கடும் போட்டி
ஏற்பட்டது. அதேபோல், கல்லுாரிகளிலும், பி.காம்., 'சீட்'டுக்கு கூட்டம் அலைமோதியது.
இந்த ஆண்டு கல்லுாரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி இருந்தாலும், பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கையில், அறிவியலுக்கும் மீண்டும் அதிக மவுசு உருவாகியுள்ளது. சென்னையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 சேர, மாணவர்களின் பெற்றோர், இரவு, பகலாக காத்துக் கிடக்கின்றனர்.

மாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'

:பள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.
'ஆன்ட்ராய்டு' அலைபேசிகளில் இந்த 'ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால்' செய்து, அந்த அலை பேசியை பள்ளி வாகனங்களில் பொருத்த வேண்டும். இந்த அலை
பேசியிலிருந்து பெற்றோர்களின் அலைபேசிக்கு மாணவர் பேருந்தில் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறார், ஒரு நிறுத்தத்தில் எத்தனை மாணவர்கள் இறங்குகின்றனர் போன்ற அனைத்து தகவல்களும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

சம்பளம் வழங்கக்கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்

மருத்துவ விடுப்பு நாட்களை பணி நாட்களாக கருதி எட்டு மாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் பள்ளி தலைமை ஆசிரியை மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம்,46. இதற்கு முன் இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். கடந்த ஆகஸ்ட்டில் இவரை மாவட்ட கல்வி நிர்வாகம் மலைப்பகுதியான அகமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை ஆசிரியை கற்பகம் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மே-2016 விரைவு ஊதிய ஆணை :2009-2010 மற்றும் 2011-2012 ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 அரசு உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாளை 26-ந்தேதி முதல் விண்ணப்பம் ஜூன் 20-ந்தேதி முதல்கட்ட கலந்தாய்வு

சென்னை, 

மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் விமலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறி விக்கை இன்று வெளியிடப் பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.  நாளை (26-ந்தேதி) முதல் அனைத்து அரசு மருத்துக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரி யிலும்  விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. ரூ.500-க்கான காசோலையை செலுத்தி விண்ணப்பங் களை பெற்றுக் கொள்ள லாம்.

ஜூன் 6-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் ஜூன் 7-ந்தேதி மாலை 5 மணி வரை பெறப்படும்.

இதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் ஜூன் 17-ந்தேதி வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும். இதையடுத்து 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ந் தேதி தொடங்கும். ஆகஸ்டு 1-ந்தேதி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்.
மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை www.tnhealth.org  என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,650 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம்.  397 இடங்கள் போக மீதமுள்ள 2,253 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 760 இடங்களில் அரசு ஒதுக்கீடு இடம் 470 ஆகும். மற்றும்  சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் உள்ள  65 அரசு ஒதுக்கீட்டு இடமும் இதன்மூலம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மொழிப்பாடத்தில் 73 பேர் 100க்கு 100 எடுத்துள்ளனர். கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

பத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம்

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர். 224 பேர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. மாநிலத்தின் 3வது இடத்தையும் இப்பள்ளியே பெற்றுள்ளது. மாநில 2வது இடத்தை கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உட்பட 50 பேர் 498 மதிப்பெண் பெற்றுள்ளனர். 3வது இடத்தை 224 பேர் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு முடிவு: 499 மதிப்பெண்கள் எடுத்து 2 பேர் முதலிடம்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் முதலிடத்தை இரண்டு பேர் பெற்று உள்ளனர். விருதுநகர் நோபல் பள்ளியை சேர்ந்த சிவக்குமாரும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ் ஆர் வி எக்செல் பள்ளியை சேர்ந்த பிரேமசுதா என்பவரும் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 98.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லையில் 95.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்தூத்துக்குடியில் 96.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரத்தில் 97.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் 96.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
விருதுநகரில் 97.81 மாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர்.
தேனியில் 96.57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரையில் 95.68 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல்லில்92.57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஊட்டியில் 93.25 சதவீத மாணவர்கள்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 95.62 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவையில் 96.22 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோட்டில் 98.48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் ஜனனி 498 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம்

பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்த வரையில் கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசுப்பள்ளியில் படித்த ஜனனி 498 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அரசு பள்ளியில் படித்த ஸ்வேதா 496 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார்.
வேலூர் மாவட்டம் சோழிங்கர் பகுதியில் உள்ள டிஎம்டி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பள்ளி மாணவி நேகா கவுசர் 496 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடத்தில் உள்ளார்
ஈரோடு சவகாட்டுபாளையம் அரசு பள்ளி மாணவி ஹரிணி 495 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளார்.
புதுக்கோட்டை கோத்தமங்கலம் அரசு பள்ளி மாணவி பவதாரணி, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி நிசாத் ரஹிமாமா, கரூர் மலைகோவிலூர் சுந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம் பெருங்காட்டூர் அரசு பள்ளி மேகலா, திருவண்ணாமலை மாவட்டம் அரசு பள்ளி தீபா, விருகம்பாக்கம் அரசு பள்ளி மாணவி கேத்ரின் அமலா ராகினி ஆகியோர் 495 மதிப்பெண்கள் 3ம் இடத்தில் உள்ளனர்.

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்-ஆசிரியர் சங்கத்தினர் மனு

புதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க தலைவர் ராஜ்குமார், முதல் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பை குறைந்தது, 15 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறும் போது, 'பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் விரும்புகின்றனர். 
எனவே, புதிய அமைச்சர் பொறுப்பேற்றதும் அளிக்கப்பட்ட இந்த முதல் மனு மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்' என்றனர்.

10 ம் வகுப்பு:மறு கூட்டலுக்கு 25.05.16 முதல் 28.05.16 வரை பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணபிக்கலாம்




+2 சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 24 முதல் மே 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிகலாம்.

சென்னை: மேல்நிலைப் பொது தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 24 முதல் மே 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிகலாம்.
அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

ஜூன் 22 முதல் ஜூலை 04ம் தேதி வரை நடைபெறவிருக்கும், மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் மே 24  முதல் மே 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

 ‘எச்’ வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம் 

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். 

தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும்.

தேர்வு அட்டவணை: 

தேர்வு தேதி    பாடம்

22.06.2016  மொழி தாள் I

23.06.2016    மொழி தாள் II

24.06.2016 ஆங்கிலம் I

துறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை, 24ம் தேதி துவங்குகிறது

அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி., மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தந்த அலுவலக பணிக்கேற்ப, வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெறுவதன் மூலம், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்பதால், அரசு பணியாளர் கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வர். இந்த தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை, 24ம் தேதி துவங்குகிறது. 31ம் தேதி வரை நடக்கும் தேர்வுக்கு, கடந்த மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தங்களது விவரங்களை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரிக்கை

'தமிழகத்தில் மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் சீலிடப்பட்ட கவர்களில் உள்ள மதிப்பெண்ணை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.மே 17ல் காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், காலை 9:00 மணிக்கே பல மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரம் புகைப்படங்களுடன் 'வாட்ஸ் ஆப்'ல் வெளியாகின. இதனால் தேர்வுத்துறை அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், 'மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9:31 மணிக்கு வெளியாகவுள்ளன. ஆனால், அதற்கு முன் மதிப்பெண் பட்டியல் விவரங்களை அறியும் முயற்சியில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான முதல்நாள் மாவட்ட வாரியான மாணவர் தேர்ச்சி விவரத்தை 'சிடி'யாக ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் 'நோடல்' அலுவலகங்கள் மூலம் பள்ளிகள் வாரியான மாணவர் மதிப்பெண் பட்டியலும் 'சீல்' வைக்கப்பட்ட கவர்களில் அனுப்பப்பட்டன.

இந்த கவர்கள் காலை 10.31 மணிக்கு பிரித்து அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்டங்களில் காலை 9.00 மணிக்கு சில பள்ளிகளில் சீலிடப்பட்ட கவர்கள் பிரிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. மே 25ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் 9.31 மணிக்கு தான் சீலிடப்பட்ட கவர்களை பள்ளிகளில் பிரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் கவர்கள் பிரித்து விதிமீறலில் பள்ளிகள் ஈடுபட்டால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பள்ளிகளில் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 17ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 19ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், இன்று முதல் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

முதன்மைக்கல்வி அலுவலர் வாசு கூறுகையில்,“ அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தில் கவனம் செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் தலைமை ஆசிரியை புவனேஷ்வரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்,”என்றார்.

பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை:பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று(18.05.16) (முதல் பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, மதிப்பெண்ணுடன் முடிவு கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வர்கள், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல், பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்-பள்ளிக் கல்வி இயக்குனரகம்

பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் 
உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:
பிளஸ் 1 வகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; எஸ்.சி., பிரிவினருக்கு, 18; எஸ்.டி., பிரிவினருக்கு, 1; இதர பிரிவினருக்கு, 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த விதிகளை மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும்போதே, தனியாக பதிவேடு வைத்து, இன வாரியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன், தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆக., 31க்குள் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை குறித்த விவரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து கல்வித்துறை ஆய்வு!

மதுரை: மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு 92.87 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 95 சதவீதத்திற்கும்மேல் தேர்ச்சி பெற கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் 93.19 சதவீதம் தேர்ச்சியே பெற முடிந்தது. இதற்கு காரணம் மொழிப் பாடங்கள் மற்றும் கணிதத்தில் எதிர்பார்க்காத எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்தது தான்.
மாவட்டத்தில் கணிதம் தேர்வை 19,524 பேர் எழுதியதில் 18,712 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தான் அதிகபட்சமாக 812 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.84 சதவீதம் ஆகும்.
இதையடுத்து, தமிழ் பாடத்தில் மாணவர்கள் அதிகம் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 35,459 பேர் தேர்வு எழுதியதில் 34,677 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். தோல்வி எண்ணிக்கை 782. தேர்ச்சி விகிதம் 97.79 சதவீதம். ஆங்கிலம் தேர்வை 37,143 பேர் எழுதி 36,480 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பாடத்தின் தோல்வி 663 ஆகும்.
இம்மூன்று பாடங்களில் ஏற்பட்ட எதிர்பாராத அதிக தோல்விகள் காரணமாக தான் மாவட்ட அளவிலான மொத்த தேர்ச்சி விகிதமும் குறைந்து விட்டது.
இதையடுத்து அதிகபட்சமாக தாவரவியலில் 444 பேரும், கணக்கு பதிவியலில் 498 பேரும், பொருளியலில் 437 பேரும் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது. இதில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'சென்டம்' அதிகரிப்பால் பி.காம்., படிப்புக்கு போட்டி

பிளஸ் 2 தேர்வில், வணிகவியல் பாடத்தில், 'சென்டம்' எடுத்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு, பி.காம்., 'சீட்' கிடைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், கணிதம், இயற்பியல், தாவரவியல் மற்றும் விலங்கியலில், 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைந்தது.
ஆனால், வணிகவியல் பாடத்தில், 3,084 பேர் சென்டம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, வெறும், 819 ஆகவே இருந்தது. அதே போல் கணித பதிவியலில், 4,341 பேர் சென்டம் பெற்றனர். வணிக கணிதத்தில், 1,072 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறும்போது, 'கடந்த சில ஆண்டுகளாக, பி.காம்., படிப்புக்கான மவுசு அதிகரித்துள்ளது. வணிகவியலில் கடந்த ஆண்டை விட, மூன்று மடங்கு மாணவர்கள், அதிக அளவில் சென்டம் பெற்றுள்ளனர். எனவே, கல்லுாரிகளில் பி.காம்., படிப்பில் சேர, இந்த ஆண்டு கடும் போட்டி நிலவும்' என்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர் மாரடைப்பால் மரணம்

ஓட்டுச்சாவடி பணியில் இருந்த ஆசிரியர், மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, கரட்டுமடத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 54; புங்கம்புதுார், காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். இவர், காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட, காங்கயம்பாளையம் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், தேர்தல் முதன்மை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம், அங்கு சென்று பணியை மேற்கொண்டார்.

நேற்று காலை, ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. 11:00 மணியளவில் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு, அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ஓட்டுச்சாவடிக்கு உடனடியாக, மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது. இச்சம்பவத்தால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், சோகமாக காணப்பட்டனர்.

மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
அதில் 
கன்னியாகுமரியில் அல்போன்சா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெவிஸ் ரிச் என்ற மாணவர் 1182 மதிப்பெண்கள் முதலிடம் பிடித்துள்ளார்
நெல்லையில் ஸ்ரீஜெயந்திரா சரஸ்வதி கோல்டன் பள்ளி மாணவி ஸ்ருதி 1191 மதிப்பெண் பெற்று முதலிடம் பி டித்துள்ளார்
தூத்துக்குடியில் காஞ்சி ஸ்ரீ சங்கர பள்ளி மாணவர் சூரியா பிரபா 1182 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி மாணவி ஸ்வாதி,1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தேனியில் டிஎம்எச்என்யு பள்ளி மாணவி தரணி 1184 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 
மதுரையில், வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீபிரியா 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பி டித்துள்ளார். 
திண்டுக்கல் மாவட்டத்தில், பழநியில் உள்ள தேவி மெட்ரிக் பள்ளி மாணவர் சுதாகர், 1184 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
நீலகிரிமாவட்டத்தில் ஊட்டியில் உள்ள பெத்லேஹம் பள்ளி மாணவி தீப்தி 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்

இயற்பியலில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்

 இயற்பியல் பாடத்தில், ஈரோடு ஐடியல் பள்ளியை சேர்ந்த விக்னேஷ், 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவர் 1184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அறிவியல் சார்ந்த நான்கு பாடங்களிலும் 800 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர்பள்ளி மாணவன் தனுஷ் 200 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் 1189 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.அவர் அறிவியல் சார்ந்த நான்கு பாடங்களிலும் 798 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்தீர் பள்ளி வைஷ்ணவ் குமார் 200 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பிடித்துள்ளார். அவர் 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அறிவியல் சார்ந்த 4 பாடங்களிலும் 795 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்

பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தி, அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இருவரும் 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நாமக்கல் கிரின் பார்க் பள்ளி மாணவி ஜெனிபர் ஜெயநந்தினி தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவர் 1184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே பள்ளியை சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார். அவர் 1182 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

ஆங்கிலத்தில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி சங்கீதா ஆங்கிலத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர் தர்மா ஆங்கிலத்தில் 198 மதிப்பெண்களுடன் மாநில அளவில் 2வது இடத்தில் உள்ளார்.
அவர் 1200க்கு 1180 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள சிசியா மெட்ரிக் பள்ளி மாணவி அக்ஷய 198 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். அவர் 1200க்கு 1178 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கணிதப் பாடத்தில் 3361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து சாதனை

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் கணிதப் பாடத்தில் 3361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக குறைவாகும். கடந்த ஆண்டு கணித பாடத்தில் 9710 பேர் 200-க்கு 200 எடுத்து  இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டு (2014) 3882 பேர் 200-க்கு 200 எடுத்து இருந்தார்கள். வணிகவியல் பாடத்தில் 3084 பேர் 200-க்கு 200 மதிப் பெண் பெற்றனர். கடந்த வருடத்தில் 819 பேர் மட்டுமே எடுத்து இருந்தனர். கணக்கு பதிவியல் பாடத்தில 4341 பேரும், வணிக கணிதத்தில் 1072 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள்  எடுத்து உள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1703 பேர்  200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 1049 பேரும், 2014-ம் ஆண்டு 1693 பேரும், 200-க்கு 200 பெற்று இருந் தனர். இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு மிக குறைந்த அளவில் மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்துள்ளனர். 5 பேர் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 124 மாணவர்களும் அதற்கு முந்தைய ஆண்டு (2014) 2710 பேரும் இந்த பாடத்தில் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரியல் பாடத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 775 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2014-ம் ஆண்டு 652 பேரும், 2015-ம் ஆண்டு 387 பேரும் 200-க்கு 200 வாங்கி இருந்தார்கள்.

விலங்கியல் பாடத்தில் 10 பேரும், தாவரவியல் பாடத்தில் 20 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள்.கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 303 மாண வர்கள் முழு மதிப்பெண் பெற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். 2014-ல் 993 பேரும், 2015-ல் 577 பேரும் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தனர்.

மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்

மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்

1. கன்னியாகுமரி -- 95.7
2. திருநெல்வேலி - 94.76
3. தூத்துக்குடி -- 95.47
4. ராமநாதபுரம் - 95.04
5. சிவகங்கை - 95.07
6. விருதுநகர் - 95.73
7. தேனி - 95.11
8. மதுரை -93.19
9. திண்டுக்கல் - 90.48
10. ஊட்டி - 91.29
11. திருப்பூர் - 95.2
12. கோவை - 94.15
13. ஈரோடு - 96.92
14. சேலம் - 90.9
15. நாமக்கல் - 94.37
16. கிருஷ்ணகிரி - 85.99
17. தர்மபுரி -90.42
18. புதுக்கோட்டை - 93.01
19. கரூர் - 93.52
2-0. அரியலூர் - 90.53
21. பெரம்பலூர் - 96.73
22. திருச்சி - 94.65
23. நாகப்பட்டினம் - 86.8
24. திருவாரூர் - 84.18
25. தஞ்சாவூர் - 90.14
26. பாண்டிசேரி - 87.74
27. விழுப்புரம் - 89.47
28. கூடலூர் - 84.63
29. திருவண்ணாமலை - 90.67
30. வேலூர் - 83.13
31. காஞ்சீபுரம் - 90.72
32. திருவள்ளூர் - 87.44
33. சென்னை - 91.81

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம்

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம் பெற்றுள்ளார். 1178 மதிப்பெண்களுடன் கோவை மாணவி சத்யா 2-வது இடமும், 1177 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி அனு 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
தேர்வெழுதிய மாணவர்களில் 91.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 90.6% ஆக இருந்தது.
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய 8,76,136  மாணவ, மாணவிகளில் 7,61,725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 4,99,463 மாணவர்கள் 60%க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள்

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும்  200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.
வணிகக் கணிதம் பாடத்தில் 1072 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
303 மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 3,084 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள்ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள், ஜூன் 2016:

மார்ச் / ஏப்ரல் 2016-ல் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

+2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17.05.2016 மற்றும் 18.05.2016 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்:
பகுதி - 1 மொழி - ரூ.550/-
பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-
மறுகூட்டல் கட்டணம்
பகுதி - 1 மொழி, பகுதி - 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
பணம் செலுத்தும் முறை:
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை:
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
வரும் 19ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்துwww.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் 21.05.2016 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற/தேர்வெழுதிய பள்ளி/மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைபெற்றுக் கொள்ளலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள இணையதள முகவரிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. 19ம் தேதி முதல் மாணவர்களே தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

EPIC அல்லது VOTER SLIP கொண்டு வாக்களித்தால் படிவம் 17Aவில் கலம் 3 ல் EPஅல்லது VSஎன்று குறிப்பிட்டால் போதும்.கடைசி நான்கு இலக்க எண்ணை எழுத தேவை இல்லை -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

EPIC அல்லது VOTER SLIP கொண்டு வாக்களித்தால் படிவம் 17Aவில் கலம்   3 ல்  EPஅல்லது VSஎன்று குறிப்பிட்டால் போதும்.கடைசி நான்கு இலக்க எண்ணை  எழுத தேவை இல்லை -தேர்தல் ஆணையம் அறிவிப்பு

CLICK HERE FOR ORDER



வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி

சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். அதை அளிக்க இயலாதவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணமாக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை 
காண்பிக்கலாம்.
அவற்றின் விவரம்:
* கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
* ஓட்டுனர் உரிமம்
* மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
* வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது)
* பான்கார்டு
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
* தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
* தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு
* லோக்சபா, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அலுவலக அடையாள அட்டைஇத்தனை ஆவணங்கள் இருந்தாலும், வாக்காளர் 
பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே, அவர் ஓட்டு போட முடியும் 

தேர்வுக்கு வராத மாணவர்களும் ’பாஸ்’; ஆசிரியர்கள் அதிருப்தி

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைமுப்பருவக்கல்வி முறை உள்ளது. மேலும்அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ்எட்டாம் வகுப்பு வரைஆல் பாஸ் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. எட்டாம் வகுப்பு முடிக்கும் வரைஅனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்வது கட்டாயம் என்றாலும்ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
அந்த தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கும்தேர்ச்சி வழங்கும் நிலை காணப்படுவதால்,மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்பு குறைந்து வருவதாகஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: 
முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படும் முன்பள்ளி இறுதி தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு,அதற்கு முந்தைய அரையாண்டு தேர்வு அடிப்படையில்தேர்ச்சி வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதற்கு காரணம்அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு இரண்டுக்கும்ஒரே பாடங்களே இருந்ததுதான். ஆனால்தற்போது மூன்று பருவங்களுக்கும்வேறு வேறு பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
அதில்மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்குஇரண்டாவது அல்லது முதல் பருவ தேர்வு அடிப்படையில்தேர்ச்சி வழங்கும் நடைமுறை உள்ளது. மூன்றாம் பருவ பாடப்புத்தகம் முழுமையாக வேறுபட்டிருக்கும் நிலையில்அதில் தேர்வே எழுதாமல்தேர்ச்சி வழங்கும் நிலை உள்ளது. இதனால்,மாணவர்களுக்கு கற்றல் குறித்த பொறுப்பு குறைந்து வருகிறது.
எப்படியும் பாஸ் செய்துவிடுவார்கள்! பின் ஏன் படிக்க வேண்டும் என்ற அலட்சிய போக்கு அதிகரித்துவருகிறது. அதை தவிர்க்கதேர்வுக்கு வராதவர்களுக்குசிறப்பு தேர்வு ஒன்றை நடத்திபின் தேர்ச்சி வழங்கினால் கூடஅர்த்தமானதாக இருக்கும். 
அதை கல்வித்துறை அலுவலர்கள் கவனத்தில் கொண்டுஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை,தேர்வுக்கு வராதவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள்ளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்குள்ளும் வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்து விட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகாததால் மாணவர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள்ளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்குள்ளும் வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 2016- - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், 62 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2016- - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதி முதல், 10 நாட்களுக்கு நடைபெறும். விண்ணப்ப கட்டணம், 25 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 2 ரூபாய் என மொத்தம், 27 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம்.

ஓட்டுச்சாவடியில், தான் ஓட்டளிக்கும் சின்னத்தை வெளிப்படையாகக் கூறி ஓட்டளிக்கச் சென்றால், அவர்களை அனுமதிக்கக் கூடாது.-தேர்தல் கமிஷன்

'ஓட்டுச்சாவடியில் சின்னத்தை வெளிப்படையாக கூறுவோரை, ஓட்டளிக்க
அனுமதிக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவு விவரம்: தேர்தல் கமிஷனின், '49 ஓ' விதிமுறைப்படி, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதோர் 'நோட்டா'விற்கு ஓட்டளிக்கலாம். இதற்காக இந்த தேர்தலில், நோட்டாவிற்கென தனி சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், '49 எம்' விதிமுறைப்படி ஓட்டுச்சாவடியில், தான் ஓட்டளிக்கும் சின்னத்தை வெளிப்படையாகக் கூறி ஓட்டளிக்கச் சென்றால், அவர்களை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது