ஆக.,2ல் காஞ்சிபுரத்தில் உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கெஜலெட்சுமி அறிவித்துள்ளார்

மாணவர்களுக்கு தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:

தேசியக் கொடியை, மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்து பயன்படுத்தக் கூடாது.
அரசு அறிவிப்பின்றி, அரை கம்பம் அல்லது முக்கால் கம்பத்தில், பறக்க விடக் கூடாது. இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.
தேசியக் கொடிக்கு சரியான முறையில், 'சல்யூட்' செய்தல் வேண்டும்.
கொடியின் மேல்பக்க காவி நிறத்தை, உள்நோக்கத்துடன் தலைகீழாக பிடித்தல், தரையில் மண் படும்படி இழுத்தல் கூடாது. பழைய சாயம் போன, கிழிந்த கொடியை பயன்படுத்த கூடாது.
கொடியை தங்கள் உடையின் ஒரு பகுதியாகவோ, இடுப்பு கீழ் அணியும் உடையாகவோ, ஆபரணம், அலங்காரமாகவோ பயன்படுத்த கூடாது.
இந்த விதிகளை பின்பற்ற, மாணவர்கள், பள்ளி, கல்லுாரி ஊழியர், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்க, சட்டத்தில் இடம் உள்ளது என, எச்சரிக்கப்பட்டுள்ளது

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்தல் - ஆய்வு செய்யும் நிபுணர் குழுவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு-அரசாணை

அடிப்படை திறன் மேம்படுத்த ஆய்வு ! கோவை மாவட்டத்தில் 650 பள்ளிகள் தேர்வு

கோவை: தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்து 815 தொடக்கப்பள்ளிகள் மற்றும், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, எ.பி.எல்., எனப்படும் செயல்வழி கற்றல் அட்டை மூலம், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஆசிரியர்களுக்கே அதிக எழுத்துப்பணி இருக்கும்.
இதனால், மாணவர்களின், எழுத்து, வாசிப்பு திறன் மற்றும் கணிதத்தில் எளிய கூட்டல், கழித்தல் முறைகளை பின்பற்றுவதில், பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இது, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில், தேர்வை எதிர்கொள்ளுதல், தேசிய திறனாய்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த, தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி, கடந்தாண்டில் கோவை மாவட்டத்தில், 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்தது.
இதில், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன், 35 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பின், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்து, கற்றல் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
நடப்பாண்டில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், முதற்கட்ட ஆய்வில், 650 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் இறுதி வரை, மாணவர்களுக்கு எளிய பயிற்சிகள், தேர்வுகள் நடத்தி, கற்றல் திறன் குறித்து, அறிக்கை தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், மொத்தமுள்ள, 15 வள மையங்களில் பணிபுரியும், ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிக்கப்படும். எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகள் எழுதுதல், எளிய கணித முறைகளில், அடிப்படை திறன் ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள், செப்டம்பர் மாதத்திற்குள் தயாரித்து, அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.

இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல்

பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை: ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. இதன்படி 1.6.2015க்கு முன் பணியேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்டில் தான் நடந்தது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் 1.6.2015க்கு பின் தான் பணியேற்றனர். இந்த விதியால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:
புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. 1.6.2015ல் கலந்தாய்வு நடந்திருந்தால் இந்த விதிமுறை சரியாக இருக்கும். ஆனால் ஆகஸ்டில் தான் கலந்தாய்வு நடந்தது.மேலும் சென்றாண்டு தலைமையாசிரியர்களாக பதிவு உயர்வு பெற்றவர்களுக்கும் கலந்தாய்வில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு இதுவும் ஏமாற்றமான விஷயம் தான். சம்பந்தப்பட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்து அனைவரும் பங்கேற்க கல்வித்துறை வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் இக்கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின்
பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் வெளியிட்டு கலந்தாய்வில்

முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணே, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில் சேர்வதற்கான அடித்தளமாக உள்ளது. எனவே, இன்ஜி., மற்றும் மருத்துவ, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற வைப்பதில், தனியார் பள்ளிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்காக, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறையின் அலுவலக உதவியாளர் முதல், மேலதிகாரிகள் வரை, தனியார் பள்ளிகளின் சார்பில், தேர்வுக்கு தேவையான உதவிகளை பெற முயற்சிக்கின்றனர். இதற்கு சில உதவியாளர்கள், ஆசிரியர்கள் துணை போகின்றனர். இந்த ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு துணை போன புகாரில், ஆசிரியர்கள் பலர் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களின் விடைத்தாளை ஆள் மாறாட்டம் செய்து எழுத உதவியதாக, நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, பல தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு, 'பிட்' கொடுத்து உதவிய ஆசிரியர்களின் பட்டியலும் தயாராகி உள்ளது. அவர்களில் பலருக்கு, முதற்கட்டமாக விளக்கம் கேட்டு,
'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். விளக்கம் வந்ததும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட உள்ளனர். புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியலை, தேர்வுத் துறையின் உத்தரவை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்,
தமிழக பள்ளிக்கல்வித் துறை தலைமைக்கு அனுப்பியுள்ளனர். புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை ரத்து
செய்யவும், அவர்களின் குற்ற தன்மைக்கு ஏற்ப, போலீஸ் மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யவும், அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை செய்துள்ளது.
இது குறித்து, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் கூறியதாவது: கடந்த, 2011 முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளை, தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாக நேரடியாக இத்துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம், ஐந்து ஆண்டுகளில், 35 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வரும், 18ல் வழங்கப்படுகிறது. அன்று முதல் வரும் ஆக., 1ம் தேதி வரை, 15 நாட்களுக்கு ஜூலை, 18ம் தேதி நாளையே பதிவு மூப்பு தேதியாக, மாணவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகமும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து செய்துள்ளன. தமிழகத்தில் உள்ள, 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள், 'ஆதார்' அட்டை எண், குடும்ப அட்டை, மொபைல் போன் எண், 'இ - -மெயில்' முகவரி போன்ற விபரங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாள் அன்று எடுத்து வர வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும், அனைத்து மாணவர்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., படித்த மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு துறையின், https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில், 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யலாம் அல்லது தங்கள் மாவட்டத்திற்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளை சுற்றி நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
வறுத்த உணவு, சிப்ஸ், குளிர்பானம், நுாடுல்ஸ், பீட்ஸா, பர்கர், உருளைக்கிழங்கு பிரை, சாக்லேட், சமோசா உள்ளிட்ட கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை அதிகமுள்ள நொறுக்கு தீனி, உணவுகளை, பள்ளி வளாகத்துக்குள்ளும், பள்ளியை சுற்றி, 200 மீட்டர் துாரத்திலும்
விற்பனை செய்யக் கூடாது. இதை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீனுக்கு பெற்றோர், ஆசிரியர், மாணவர்களை கொண்ட மேற்பார்வை குழு அமைத்து, ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணிக்க வேண்டும். உணவு தயாரிப்பில் தரமான முறையை பின்பற்ற ஆய்வு நடத்த வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.வாரத்துக்கு, குறைந்தபட்சம் இரு பாடவேளை, விளையாட்டுக்கு ஒதுக்கி, உடல்திறன் மேம்படும் வகையில் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த வேண்டும்.
வீடுகளிலும் மாணவர்கள், அதிக நேரம், 'டிவி' பார்ப்பதை தவிர்த்து, உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது. 

பணிப் பதிவேட்டில் பதிவு செய்தல் -பொதுவான வழிகாட்டி நெறிமுறைகள் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் 08.07.2016

ஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு:விண்ணப்பங்களை ஜுலை 19 முதல் 28 வரை சமர்ப்பிக்கலாம் .


தொடக்கக் கல்வி துறை
3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்  
4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 
6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 
20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)  
21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் 
பள்ளிக்கல்வித்துறை
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு  
7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 
13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 
20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

18ம் தேதி 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், வரும் 18 ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

மதுரை: 'அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசு நீடித்துள்ளது. 'புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சம் மீண்டும் வழங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளது. 'கட்டணமில்லா சிகிச்சை' என அறிவித்து விட்டு, 'கண் புரை அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.45 ஆயிரம்தான் வழங்க முடியும்' என அறிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். இது கட்டணமில்லா சிகிச்சை நோக்கத்திற்கு எதிரானது. சந்தா தொகை ரூ.120 என்பதை ரூ.180 ஆக உயர்த்தியது ஏற்புடையது அல்ல. சந்தா தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து ஊழியர் சங்கங்களுடன், அரசு பேச வேண்டும். திட்டத்தில் சேருவது குறித்து விருப்புரிமை கோர வேண்டும். மத்திய அரசு, தெலுங்கானா, கர்நாடகா போன்று இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

அரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புரொஜெக்டர், கணினி ஸ்கிரீன், இன்டர்நெட், 'பவர் பாயின்ட்' போன்ற வசதியுடன் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மத்திய அரசு நிதியுதவிடன் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் 'மெய்நிகர் கற்றல்' வகுப்பறைகள் தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக 770 பள்ளிகள், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) இவ்வகுப்பறைகளை அமைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) ஈடுபட்டுள்ளது. இவ்வகுப்பறையில் ஹார்டுவேர் கணினி, வெப் ேகமரா, புரொஜெக்டர், மெகா ஸ்கிரீன், நவீன ஆடியோ சிஸ்டம், அதி விரைவு இன்டர்நெட் இணைப்பு, பிரத்யேக மென்பொருள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் இவ்வகுப்பறை வசதி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தவும், பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சிறப்பு வல்லுனர்கள் பயிற்சி வகுப்பு நடத்தவும் பயன்படுத்தப்படும். மேலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடங்கள் தொடர்பாக எஸ்.சி.இ.ஆர்.டி., தொகுத்துள்ள 200க்கும் மேற்பட்ட வீடியோ தொகுப்புகள் காட்சிப்படுத்தப்படும். உதாரணமாக 'இருதயம்' பாடம் என்றால் அதன் அமைப்பு, செயல்பாடு குறித்து 'யூ டியூப்' வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், வரலாறு, முக்கிய இடங்கள், அனிமேஷன் கலந்த காட்சி தொகுப்பு வீடியோக்களையும் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ளது. இவை மெய்நிகர் கற்றல் வகுப்பறையில் மாணவர்களுக்கு காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன தொழில் நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்களும் தெரிந்துகொள்ள 'வெர்சுவல்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். தேர்வு நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். இவ்வகுப்புகளில் கற்றல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டில்லி 'எர்னட்' மற்றும் 'ரிக்கோ' நிறுவனம் சார்பில் ஆக., 4 முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, என்றார்.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையைஅரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணைஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள்ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின்வாட்ஸ் ஆப்களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரேபொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன்பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும். தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்குமுதலில் ஒன்றியம்நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின்மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும்பின்மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும் கண் பார்வையற்றவர்மாற்றுத்திறனாளிராணுவ வீரர்களின் துணைவியர்இதய அறுவை சிகிச்சைசிறுநீரக அறுவை சிகிச்சைபுற்றுநோயாளி,கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர்மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன்மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால்,இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன்மனைவி என்ற அடிப்படையில்கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள்அதே தகுதியில்மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
தயக்கம் ஏன்
ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள்கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால்கல்வித்துறை இயக்குனர்கள்இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு,அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கஅதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையைஅரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணைஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும்அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள்ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின்வாட்ஸ் ஆப்களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரேபொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன்பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும். தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்குமுதலில் ஒன்றியம்நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின்மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும்பின்மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும் கண் பார்வையற்றவர்மாற்றுத்திறனாளிராணுவ வீரர்களின் துணைவியர்இதய அறுவை சிகிச்சைசிறுநீரக அறுவை சிகிச்சைபுற்றுநோயாளி,கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர்மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன்மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால்,இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன்மனைவி என்ற அடிப்படையில்கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள்அதே தகுதியில்மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
தயக்கம் ஏன்
ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள்கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால்கல்வித்துறை இயக்குனர்கள்இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு,அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கஅதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

சிவகங்கை: புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா,அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அறிக்கைப்படி பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது.
வல்லுனர் குழு செயல்பாடு குறித்து திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் சில விபரங்களை பெற்றுள்ளார்.
அதன்படி வல்லுனர் குழு மார்ச் 28 ல் ஒருமுறை மட்டும் கூடியுள்ளது. அதிலும் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. மேலும் 5 மாதங்களில் இதுவரை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியை கூட சந்திக்கவில்லை. மேலும் அந்த குழுவிற்கு தகவல் தெரிவிக்க 'இமெயில்' கூட இல்லாதது தெரியவந்துள்ளது.
பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: 2016 ஜூன் 22 வரை புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு 1,433 பேர் விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு
மட்டுமே பணப்பலன்
கிடைத்துள்ளது.
இதனால் வல்லுனர் குழுவின் முடிவை எதிர்பார்த்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் வல்லுனர் குழு முறையாக செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது, என்றார்.

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்.

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்
எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளி
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட
வாரியாக தேர்வுக்குழு அமைத்து, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 'கடந்த ஆண்டு விருது வழங்கியதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை; தேர்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 'அப்போது என்ன பதில் அளிப்பது' என, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம், உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, 'விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பது நிரூபணமானால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான உண்மை நிலை அறிக்கை அடுத்த வாரம், தமிழக அரசு சார்பில், பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 20ம் தேதி வரை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. பரிசீலனை முடிந்து, ஆக., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்ப,
உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறை!

தமிழகத்தில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் மாணவர்களுக்கான விரல் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டம் நடைமுறையில் இருப்பதால், கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கான முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 8 அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, இத்திட்டம் விரைவில் மாவட்ட முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும், இதனால் மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கண்காணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் பெறும் ஆசிரியர்களுக்கு புதிய நிபந்தனை!

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.  

இதற்காக தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தப்பட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறுவதும், சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்படுவதும் வழக்கம்.  

இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டும் என்றும், கடந்த கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் நடப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது எனவும் கடுமையான விதிமுறைகள் அரசாணையாக வெளியிடபட்டுள்ளது. 

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விரைவில் அறிவிப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக...: தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் செய்யப்படுகிறது. இதற்கு, மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து, கவுன்சிலிங் என்ற கலந்தாய்வு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கோடை விடுமுறை
யில் நடத்தப்படும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, இந்த கலந்தாய்வு தாமதமாகவே நடத்தப்படுகிறது. இதனால், பள்ளிகள் துவங்கி, சில மாதங்களான பின், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வுக்கு பிறகே, காலியிடங்களில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் இட மாறுதல் பெற முடியும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடப்பு மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கலந்தாய்வுக்காக புதிய விதிகளை, பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

ஓரிரு தினங்களில்... : 'இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியாகும்; முறைகேடு, தில்லுமுல்லுக்கு இடம் அளிக்காமல், அதிகாரிகள் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு, அதிகாரத்தை தள்ளி வைத்து விட்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

CPS:அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி : முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு

திண்டுக்கல்: காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரியில் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டது. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என, முதல்வர் ஜெ., உறுதிமொழி அளித்ததால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆய்வு குழு அமைப்பு : கடந்த பிப்.,28ல் அரசு அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில் 6 பேர் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் ஜூன் 30 வரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, முதல்வர் ஜெ., உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஜூலை 10 ஆன பின்பும் இதுவரை அறிக்கை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய தர வரிசை எண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது: முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்யும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க 4 மாத காலம் அவகாசம் வழங்கினார். ஆனால், காலம் முடிந்த நிலையிலும் அந்த ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க வில்லை. எனவே உடனே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள்!

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே பணியாற்றி வருகின்றனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்படாமல், உடற்கல்வி ஆசிரியர்களே அந்தப் பொறுப்பில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத் தலைவர் டி.ரவிச்சந்தர் கூறியதாவது:
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 2 உடற்கல்வி ஆய்வாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர். மீதமுள்ள 30 பணியிடங்களை மூத்த உடற்கல்வி இயக்குநர்கள் பொறுப்பில் கவனித்து வருகின்றனர்.
மேலும், ஒருவர் பொறுப்பு பதவியில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற அரசாணை இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இதனால், 32 மாவட்டங்களில் ஆண்டுக் கணக்கில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பதவி பொறுப்பு பணியிடமாகவே தொடர்ந்து வருகிறது.

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சென்னை, ஜூலை 9:
அர சுப் பள் ளி க ளில் பணி யாற் றும் ஆசி ரி யர் க ளுக்கு ஆண் டு தோ றும் நடத் தும் பணி யிட மாறு தல் கவுன் ச லிங்கை உடனே நடத்த வேண் டும் எனக் கேட்டு தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசி ரி யர் கள் நேற்று ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.
தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசி ரி யர் கூட் ட ணி யின் சார் பில் நேற்று தமி ழ கம் முழு வ தும் ஆர்ப் பாட் டம் நடத்தப்பட்டது. சங்க செய லா ளர் பாலச் சந் தி ரன் கூறு கை யில், ‘‘உட ன டி யாக கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று கேட்டு 300 மாவட்ட தொடக்க கல்வி அலு வ லர் அலு வ ல கங் கள் முன்பு கோரிக்கை ஆர்ப் பாட் டம் செய் தோம். இதற்கு பிறகு அரசு உத் த ரவு வழங் கும் என்று எதிர் பார்க் கி றோம் ’’ என் றார்.

அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு-அரசாணை

 தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம். அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக தொடரும். இந்த திட்டத்தால் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.

G.O CLICK HERE

பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது

பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும், நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், திடீர் மழை மற்றும் அதனால் தேங்கும் நீரால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
இதற்கு முன்னெச்சரிக்கையாக, தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி வளாகத்தில், நீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்,.குடிநீர் பானைகள், குடங்கள், பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை கண்டிப்பாக மூடி வைக்க வேண்டும்; வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்  பள்ளி மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

எந்த சூழ்நிலையிலும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் செய்யக் கூடாது. அவர்களும் சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்

டெங்கு, சிக்குன் குனியா நோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை கண்காணிக்க புது ’சாப்ட்வேர்’

தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது.
இந்த விவரங்கள்பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுசாப்ட்வேர் மூலம்,கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த,சாப்ட்வேர் மூலம்அனைத்து கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்களும் புள்ளி விவரத்துடன் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி வாரியாகஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் பின்எந்த பள்ளியில்எந்த பாடத்தில் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளதுஒரு மாணவனின் தேர்ச்சி குறைய எந்த பாடம் காரணம்அதற்கான ஆசிரியர் யார் என்ற விவரங்கள்,கணினியில் சேகரிக்கப்படுகின்றன.
இந்த பட்டியலின் படிசம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டுஅவரின் பணிகள்வகுப்பு நடத்தும் முறைகற்பித்தல் ஈடுபாடு ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அந்த ஆசிரியர் சரியாக பணி செய்யாவிட்டால்அவருக்குநோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்கவும்;ஆர்வமான ஆசிரியராக இருந்தால் அவருக்குமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம்விரிவுரையாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கவும்பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள், 50 சதவீதத்தை தாண்டியுள்ளன. மேலும்தற்போது முதலே ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டபுதிய கல்விக் கொள்கையில்முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது. 
இதுகல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்துஆதரவும்எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்புதிய கல்வி கொள்கை குறித்து, 28 பக்கங்கள் அடங்கிய,முக்கிய சாராம்சங்கள் நிறைந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதில்பத்தாம் வகுப்பு வரைமுக்கிய பாடப்பிரிவுகளானகணிதம்அறிவியல் மற்றும் ஆங்கில பாடத்துக்குஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல்மொழிப்பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்குமாநில அரசுகளே பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
இதை செயல்படுத்தினால்நாடு முழுவதும் எவ்வித ஏற்றத்தாழ்வு இன்றிமாணவர்களின் கல்வித்திறன் மேம்பட வாய்ப்பாக இருக்கும் என்பதுபலரது கருத்தாக உள்ளது. மேலும்அடிப்படை கல்வித்தரம் உயரும் பட்சத்தில்மேல்நிலைக்கல்விஉயர்கல்வி பெறுவதிலும்போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்காது. பின்தங்கிய கிராமப்புற மாணவர்களும்தேசிய திறனறி தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
கல்வியாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில்நாடு முழுவதும் ஒரே கல்விமுறை பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கும்போதுமாநில வாரியாககல்வியாளர்கள்மூத்த ஆசிரியர்களின் கருத்துகளை பெற்றுநடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும்தேர்வு முறைகளும்ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதைமேல்நிலை வகுப்புகளிலும் பின்பற்றினால்தேசிய அளவிலான தேர்வுகளில் அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்க உதவியாக இருக்கும்,என்றார்.

'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்

மதுரை: தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கல்வித் துறையில் ஆசிரியர்கள் நலன் கருதி, 2001 முதல் 'ஒளிவு மறைவற்ற மாறுதல்
கலந்தாய்வு' நடத்தப்படுகிறது. துவக்கத்தில் பல குளறுபடிகள், அரசியல் தலையீடு, ஒரே இடத்தில் இருவர் நியமனம், காலியிடங்கள் மறைப்பு, மறைக்கப்பட்ட இடங்களுக்கு 'பேரம்' என கல்வித் துறையில் 'கலகலப்பு' இருந்தாலும், இயக்குனராக கண்ணப்பன் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு பெரிய அளவிலான புகார்கள் இன்றி கவுன்சிலிங் நடந்து முடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பொது 'கவுன்சிலிங்' அதைத் தொடர்ந்து பதவி உயர்வு 'கவுன்சிலிங்' முடிந்த பின் தான் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டில் நிம்மதியே இருக்கும்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் 'கவுன்சிலிங்' நடத்தப்படும். அப்போது தான் கற்பித்தல் பணியிலும் தொய்வு ஏற்படாது. ஆனால் தற்போது, ஜூலை முதல் வாரம் கடந்தும் இதுவரை 'கவுன்சிலிங்'கிற்கான விண்ணப்பங்களே வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் பெரும் குழப்பத்திலும் உள்ளனர்.

சொதப்பல்: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவால் 2001ம் ஆண்டில், ஒளிவு
மறைவற்ற கலந்தாய்வு முறை, தமிழக கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காலதாமத பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மன
உளைச்சல் அடைகின்றனர். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணி
யிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் கல்வி பாதிக்கிறது. அதிகாரிகள் முன்
கூட்டியே திட்டமிட்டு உரிய நேரத்தில் 'கவுன்சிலிங்' நடத்த முன்வர வேண்டும். இந்தாண்டு விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் சந்திரன் கூறுகையில், "கவுன்சிலிங் நடக்காததால், ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடம் இருந்தும் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை. விரைவில் கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

மாறுதல் கலந்தாய்வு எப்போது?; ஆசிரியர்கள் போராட முடிவு

சிவகங்கை: ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தாததை கண்டித்துவரும்௮ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்ததமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்துகூட்டணியின் நிர்வாகிகள் கூறியதாவது: 
கடந்த ஆண்டுகளில்மே மாதத்தில்,ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் வழங்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளிலேயேஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். கற்பித்தல் பணி பாதிக்கப்படவில்லை. 
ஆனால்கடந்த ஆண்டுபள்ளி திறந்த பின்னேகலந்தாய்வு நடந்ததுகற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும்பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் கலந்தாய்வு நடத்துவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 
இதை கண்டித்து௮ம் தேதிஉதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓய்வூதியம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமை:3 நாளில் பணம் கிடைக்க கருவூலத்துறை ஏற்பாடு

காஞ்சிபுரம்:'மாவட்டத்தில், அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கான வழி முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ஆவணங்களை சரி வர சமர்ப்பித்தால்,
மூன்று நாட்களில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநில அரசு பணிகளில் ஓய்வு பெற்றவர்கள், முதல் ஓய்வூதியத்தை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை, மாவட்ட தலைமை கருவூத்திற்கு வந்து, விவரம் கேட்டு, அதன் பின் கொண்டு வந்து கொடுப்பர். அதில் குறைபாடு இருந்தால், மீண்டும் அலைய வேண்டி இருந்தது.

தற்போது, அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வசதிக்காக என்னென்ன ஆவணங்கள்
கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்ற விவரம், kanchi.nic.in என்ற, மாவட்ட இணையதளத்தில்
பதிவேற்றப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, அதன்படி ஆவணங்களை கொடுக்கலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:'பான்' கார்டு, தடையில்லா சான்று, தனிநபர் வங்கி கணக்கு எண், 'ஆதார்' எண், இரண்டு புகைப்படங்கள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

lமாவட்டத்தில் தற்போது, 26 ஆயிரத்து, 71 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்கள், 940. இந்த ஆண்டு, 214, இதில், மே மாதம் ஓய்வு பெற்றவர்கள், 36, ஜூன் மாதம் ஓய்வு பெற்றவர்கள், 2 பேர்.

தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
சொந்த ஊர் : தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய விதிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமான விதிகளில், பல மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல ஆசிரியர்கள், தங்கள் சொந்தஊர் கொண்ட மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் முகாமிட்டு, 'ஓபி' அடிக்கும் நிலையை மாற்றலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, கட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வு : அதேபோல், பொதுத் தேர்வு தேர்ச்சி மற்றும் கற்றல் அடைவு தேர்வுகளில், பின் தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரியில்,ஆசிரியர்கள் பணியிடம் காலி ஏற்படாதவாறு, முழுவதும் நிரப்பும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர் எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆசிரியர்கள் கொண்ட, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியர்களுக்கு, வட மாவட்டங்களில் பணிமாற்றம் வழங்குவது குறித்தும் விதிகளில், குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. மேலும், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன் எந்த விதமான, மறைமுக இடமாறுதலும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி முடியும் போது, கவுன்சிலிங்கை துவங்கலாம் என்றும் பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' -தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது

'பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்
 அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி, மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்
தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை
உருவாக்கப்படும்
ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ள பெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்
ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


3 பாடத்துக்கு ஒரே 'சிலபஸ்' : ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டு, பல புகார்கள் எழுகின்றன. எனவே, தேசிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஒரே தேர்வு நடத்தலாமா என, ஆலோசிக்கப்படுகிறது.
கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் ஒவ்வொரு விதமாக படிப்பதால், அவற்றுக்கு தேசிய அளவில், ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்கள், மாநிலங்களின் விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்பு முதல் கட்டாயம் ஆக்கப்படும்.