எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: செப்.8 தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது

 எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. இடையில் 13-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) பக்ரீத் விடுமுறை விடப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்.
எஸ்எஸ்எல்சி தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.10 (சனி) - மொழித்தாள்-2
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் முதல்தாள்
செப்.14 (புதன்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.16 (வெள்ளி) - கணிதம்
செப்.19 (திங்கள்) - அறிவியல்
செப்.21 (புதன்) - விருப்ப மொழி
செப்.23 (வெள்ளி) - சமூக அறிவியல்
பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகளும் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
பிளஸ் 2 தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.9 (வெள்ளி) - மொழித் தாள்-2
செப்.10 (சனி) - ஆங்கிலம் முதல் தாள்
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.14 (புதன்) - வணிகவியல், மனையியல், புவியியல்
செப்.15 (வியாழன்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், அரசியல் அறிவியல், கணக்கியல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.16 (வெள்ளி) - இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.19 (திங்கள்) - இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள்
செப்.21 (புதன்) - வேதியியல், கணக்குப்பதிவியல்
செப்.23 (வெள்ளி) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது.
எனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராள மான புதிய தொடக்க பள்ளி துவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது. மாறாக குறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழி கல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின் ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்த இடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்த மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்ற ஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறு ஆசிரியர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது;

ஆசிரியர்களின் பள்ளி வருகையை யும், பள்ளியில் இருப்பதையும் உறுதிப்படுத் தவும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறைக்கு, கடந்த ஆண்டே கல்வித் துறை திட்டமிட்டது. தேர்தலால் இந்த அறிவிப்பு தள்ளி போடப்பட்டு, சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
புதிய திட்டம் குறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட் கூறும் போது, ''ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, மின்னணு கல்வி மேலாண்மை, கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ் போன்ற திட்டங் களுக்கு தகவல் தொகுப்பாக பயன்படுத்த எளிதாக இருக்கும்,'' என்றார்.

வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது

. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்.

அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 168 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 86 பேருக்கு மட்டும் விருப்பமான இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள, 82 பேர் தலைமை ஆசிரியர்களாகவே பணியை தொடர விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை. ஆனால், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இணையான ஊதியம், சலுகை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன. அது போன்ற பள்ளிகளுக்கு, 'பொதுத்தேர்வு மாணவர்கள், நல்ல முறையில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்; சுற்றுலா அழைத்துச் சென்று நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா செல்லும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை சுவாரஸ்யமாக படிக்க உதவும் புதிய செயலியை ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ் யமாகவும் விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமை யான டிவிடி-யை 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வியின் தரத்தை மேம் படுத்தவும், கற்பித்தல், கற்றல் பணியில் புதுமையான முறைகளை கொண்டுவரவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ்மாகக் கற்கும் வண்ணம், பட உட்கிரகிப்பு தொழில்நுட்பத்தைப் (Image Recognition Application Technology) பயன்படுத்தி மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் புதிய செயலியை (tn schools live) உருவாக்கியுள்ளது. செல்போனில் (ஆண்ட்ராய்டு) கூகுள் பிளே ஸ்டோரில் (tn schools live) இருந்து இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முப்பரிமாணம்

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்!

தொடக்க பள்ளிகளில்மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கானவிருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்இன்று துவங்குகிறது. 
முதல் நாளான இன்றுஉதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுகிறது. நாளைநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குஉதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, 6ம் தேதிபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் தான்ஒவ்வொரு ஆண்டும் உள்ளடி வேலைகள் அதிகமாகிஆங்காங்கே முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 
இதேபோலஇடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிலும்தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாககடந்த ஆண்டுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஆண்டுகாலி இடங்களை மறைத்து,அதில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் வழங்கக் கூடாது எனஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம்

ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களில், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநிலமாவட்ட அளவிலும்அதிக மதிப்பெண் பெற்றுமுதல் மூன்றுரேங்க்களை பெறுகின்றனர்.
ஆனால்இதுபோன்று ரேங்க் பெறும் மாணவ,மாணவியர் உட்படஅதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர்பிளஸ் 1 பாடங்களை படிப்பதில் திணறுவது தெரியவந்து உள்ளது. குறிப்பாககணிதம் மற்றும் உயிரியலில்,மாணவர்களின் கற்கும் திறன் மிகவும் மந்தமாக உள்ளதாகபள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்துஆசிரியர்கள் கூறியதாவது: 
பத்தாம் வகுப்பு முடித்துபிளஸ் 1 சேரும் மாணவர்களில் பலர்அடிப்படை கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறும் மனப்பாடமாக படித்து விட்டு வருவதால்பிளஸ் 1ல் திணறுகின்றனர். இதற்கு, 10ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் முறை தான் முக்கிய காரணம். தேர்ச்சி விகிதத்தை அதிகமாக காட்டஅதிகாரிகள் உத்தரவிடுவதால்ஆசிரியர்கள்தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப,மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனர். 
மேலும்விடைத்தாளுக்கு மறுமதிப்பீடும் இல்லை என்பதால்ஆசிரியர்கள் எந்த தடையும் இல்லாமல்,திருத்தும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்துதேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வகையான மாற்றம் என்பதை,ஆசிரியர்கள்வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு செய்யும் என்றனர்.

வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்'

'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் சிலர், 'டேம்ஸ்' என்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், வாட்ஸ் ஆப்பில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு ஆலோசனை நடத்தினர். அந்த பதிவுகளை சிலர், கல்வி அதிகாரிகளுக்கு 'இ-மெயில்' அனுப்பி உள்ளனர்.இதையடுத்து, பாரதிராஜா, நடராஜன், முருகேசன் மற்றும் லிங்கத்துரை என, நான்குஆசிரியர்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில், 'அரசு மற்றும் மாவட்ட நிர்வாக ரீதியான செயல்பாடுகளை, வாட்ஸ் ஆப்பில் விமர்சனம் செய்வது, அரசு பணியாளர் நடத்தை விதிகளுக்கு முரணானது. ராமநாதபுரம் கலெக்டர் விசாரணை நடத்த உள்ளதால், அவர் முன் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்றால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இவர்களில், பாரதிராஜா, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் முருகேசனும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்.இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிஜெயக்கண்ணுவிடம் கேட்டபோது, ''எனக்கு இதுப்பற்றி எதுவும்தெரியாது. மாவட்ட கலெக்டர், 'மெமோ' கொடுக்க சொன்னார்.கருத்துரிமையை நான் எதிர்க்கவில்லை,'' என்றார்.

இதற்கிடையில், வாட்ஸ் ஆப்பில் விவாதித்ததால், நோட்டீஸ் அளித்த சம்பவத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.கல்வித்துறை அதிகாரிகளிடம், அதிகார போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களிடம் எதற்கும்கருத்து கேட்பது இல்லை. வாட்ஸ் ஆப் குரூப் என்பது பூட்டிய வீட்டிற்குள், உறுப்பினர்கள் பேசிக்கொள்வது. அதை எட்டிப் பார்த்து நட வடிக்கை எடுப்பது அநாகரிக செயல். அடக்கு முறை செய்தால், மீண்டும் இயக்கங்களை இணைத்து போராட வேண்டியிருக்கும்.கே.பி.ஓ.சுரேஷ், மாநில தலைவர்,தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங் களில் கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கை தேவை. இதுபோன்ற செயல்பாடுசிக்கலை ஏற்படுத்தும். தங்கள் குறைகளை அதிகாரிகளை சந்தித்து கூற வேண்டும்.

சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர்,தமிழ்நாடு உயர், மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம்